மறுமைநாளில் தண்டனை
ADDED :1947 days ago
ஒருமுறை அபூமஸ்வூத் என்னும் எஜமானர் தன்னுடைய பணியாளரை கோபத்தில் தாக்கினார். அப்போது அவருக்கு பின்புறத்தில், ‘‘அபூ மஸ்வூதே! உம்மை விட இறைவன் உமது பணியாளர் மீது மிகவும் சக்தி படைத்தவன்’’ எனக் குரல் கேட்டது. திரும்பி பார்த்த போது அங்கு நாயகம் நிற்பதைக் கண்டார். பணியாளர் தண்டிக்கும் அளவுக்கு தவறே செய்தாலும் அதற்குரிய தண்டனையை இறைவன் ஒருவனே கொடுக்க வேண்டும். அதை மீறி தண்டிக்கும் அதிகாரம் உமக்கு இல்லை என எச்சரித்தார்.
உடனடியாக பணியாளரை விடுவித்தார் அபூமஸ்வூத். இல்லாவிட்டால் மரணத்திற்குப் பின் இறைவன் முன்னிலையில் உங்கள் இருவரின் வாழ்விலும் செய்த குற்றங்கள் கணக்கிடப்படும். இதில் யாருடைய குற்றம் மிகுதியாக இருந்தாலும் அதற்கான தண்டனை கிடைக்கும்” என விளக்கினார்.