உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதை நினைப்போம்

நல்லதை நினைப்போம்


வானொலி நிலையத்தில் ஒலிஅலைகள் மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு வான்வெளியில் அனுப்பப்படுகிறது. இந்த மின்காந்த அலைகள் ஒரு வினாடிக்குள் உலகத்தை ஏழு முறை சுற்றக் கூடியவை. இந்த அலைகளை நம் வீட்டில் உள்ள வானொலி மீண்டும் ஒலிஅலைகளாக மாற்றுகிறது. நம் மனதில் எழும் எண்ணங்களும் இதைப் போன்றதே. சாதாரண மின்காந்த அலைகள் வினாடிக்கு ஏழு தரம் உலகத்தை சுற்றுமானால், அபரிமிதமான சக்தி படைத்த எண்ண அலைகள் எழுபது முறை சுற்றி விடும் அல்லவா? அதனால் நல்லதை மனிதன் எண்ணினால் அது உலகெங்கும் நல்ல அலைகளை ஏற்படுத்தும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !