உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்ரமணியர் கோவிலில் வைகாசி கார்த்திகை விழா

பாலசுப்ரமணியர் கோவிலில் வைகாசி கார்த்திகை விழா

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவிலில் வைகாசி கார்த்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருக்கோவிலூரில் பழமையான பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 7 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.ராஜ குருக்கள் பூஜைகளை முன்னின்று நடத்தினார். மாலை 6 மணிக்கு பஜனை, அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !