செட்டிப்பட்டு வரதராஜப்பெருமாள் கோவிலில் தசமி திருமஞ்சனம்
ADDED :2168 days ago
திருக்கனுார்; செட்டிப்பட்டு வரதராஜப்பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு தசமி திருமஞ்சனம் நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு கடந்த 27 ம் தேதி நடந்தது.அதனையொட்டி, அன்று காலை 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை மற்றும் நெய் வேத்தியம் நடந்தது.தொடர்ந்து,நேற்று முன்தினம், திருவோண நட்சத்திரத்தையொட்டி, மாலை 6:00 மணிக்கு தசமி திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பூ மாலை அலங்காரம் செய்து, சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் செட்டிப்பட்டு மற்றும் சுற்று வட்டார மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.