மண்சட்டியில் சாப்பாடு
                              ADDED :1858 days ago 
                            
                          
                           
ஏழுமலையான் தான் உலகிலேயே பெரிய பணக்கார சுவாமியாக இருக்கிறார்.  ஆனாலும் அவர் மண் பாத்திரத்தில் சாப்பிடுகிறார் தெரியுமா? பீமன் என்னும் மண்பாண்ட தொழிலாளி, தினமும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண்ணால் பூக்கள் செய்து வழிபட்டு வந்தார். அவரது பக்தியை உலகிற்கு உணர்த்த பெருமாள் விரும்பினார். தொண்டைமான் சக்கரவர்த்தியின் கனவில் தோன்றி, “ மன்னா! நீ தினந்தோறும் அளிக்கும் பொன் மலரை விட குயவனான பீமன் தரும் மண்மலர் மீது எனக்கு விருப்பம் அதிகம்” என்றார். இதன் பின்னர் பீமனுக்கு வேண்டிய உதவிகளை வழங்கினார் மன்னர்.  பீமனை நினைவு கூரும் விதத்தில் ஏழுமலையானுக்கு தயாராகும் நைவேத்யங்கள் மண்பாண்டங்களில் படைக்கப்படுகிறது.