உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பொள்ளாச்சி கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றன.


ராமலிங்கேஸ்வரர், நந்தீஸ்வரருக்கு, 16 வகையான சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன்பின், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ராமலிங்கேஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாகாளியம்மன் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நடந்த பூஜையில், ருத்ரலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுப்ரமணிய சுவாமி கோவில், ஐயப்பன் கோவில்,குமரன் நகர் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்திலுள்ள காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதியில் பிரதோஷ வழிபாடு நடந்தது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ஸ்ரீமல்லேஸ்வரர் மலை கோவிலில் நேற்று மாலை, 5:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. சுவாமிக்கு, சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. மல்லேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழிபாட்டில், பக்தர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.வால்பாறைவால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள, காசி விஸ்வநாதருக்கு புரட்டாசி மாத பிரதோஷ பூஜை நேற்று மாலை நடந்தது. சந்தனம், திருநீறு, இளநீர், மஞ்சள், தேன், பால், தயிர் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !