உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி, தசரா கொண்டாட்டங்களில் எளிமை: மஹா., அரசு

நவராத்திரி, தசரா கொண்டாட்டங்களில் எளிமை: மஹா., அரசு

மும்பை: கொரோனா பரவல் காரணமாக மஹா.,வில் இந்த ஆண்டு நவராத்திரி, தசரா கொண்டாட்டங்களில் எளிமையை கடைப்பிடிக்க வேண்டும். கர்பா, தாண்டியா நடனங்களுக்கு அனுமதி இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி அக்., 17ல் துவங்குகிறது, தசரா பண்டிகை அக்.,25 ல் கொண்டாடப்படுகிறது. மாநிலத்தில் கொரோனா பரவல் குறையாத நேரத்தில் நவராத்திரி போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து 16 குறிப்புகள் அடங்கிய ஆணையை அரசு வெளியிட்டுள்ளது. அதில் கொண்டாட்டங்களின் போது மக்களை அதிகம் கவராத வகையில் நிகழ்ச்சிகள் எளிமையாக இருக்க வேண்டும். வழக்கமான கொண்டாட்டங்களுக்கு பதிலாக ரத்ததானம் போன்றவற்றை தன்னார்வ அமைப்புகள் நடத்தலாம். என் குடும்பம் என் கடமை என்பதை மக்கள் உணர வேண்டும்.

கர்பா, தாண்டியா நடனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி மற்றும் துர்கா பூஜைகளின் போது உலோகத்தால் ஆன சிலைகளை வைத்து வழிபட வேண்டும். களிமண்ணால் ஆன சிலைகளை கொண்டு வழிபட்டால் மக்கள் அவற்றை வீடுகளிலேயே கரைத்து விட வேண்டும். சிலைகளை விஜர்சனம் செய்வதற்கு ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !