உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குப்பையில் கிடந்த கிரீடம் : கோவிலில் ஒப்படைத்த துாய்மை பணியாளர்

குப்பையில் கிடந்த கிரீடம் : கோவிலில் ஒப்படைத்த துாய்மை பணியாளர்

 மயிலாடுதுறை: குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடத்தை எடுத்து கோவிலில் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாகை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சி யில் துாய்மை பணியாளராக பணிபுரிபவர் சித்ரா. இவர் குத்தாலம் பஞ்சுகார செட்டி தெருவில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பையை எடுத்தார். அதில் வெள்ளி கிரீடம் கிடப்பதைக் கண்டார். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். தண்டாயுதபாணி சுவாமி கோவில் வெள்ளி கிரீடம் என்பதும், சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை கழற்றிக் குப்பையில் போட்ட போது, அதனுடன் தவறுதலாக கிரீடமும் வந்ததும் தெரிந்தது.இதையடுத்து சித்ரா கிரீடத்தை கோவில் நிர்வாகி முத்துக்குமரனிடம் ஒப்படைத்தார். துாய்மை பணியாளர் சித்ராவை பலரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !