உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் ஏகாதசி விழா

வேணுகோபால சுவாமி கோவிலில் ஏகாதசி விழா

 கோவை:லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது.பெரியகடைவீதி, கருப்பகவுண்டர் வீதி சந்திப்பிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது.வளர்பிறை ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு, பால் தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேகமும், ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜையும் நடந்தது.ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளி பின்பற்றி, பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !