வளர்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED :2029 days ago
தேவகோட்டை : புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு பூஜை நடந்தன. இறகுசேரி மும்முடிநாதர் கோவிலில் நந்திக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. வெளிமுத்தி பழம்பதி நாதர் கோவிலில் நந்தீஸ்வரருக்கும், சுவாமி பழம்பதிநாதர், பெரியநாயகிஅம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. வளர்பிறை பிரதோஷமான நேற்று ஏராளமான பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்தனர்.