உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் தேகளீச பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு

உலகளந்த பெருமாள் கோவிலில் தேகளீச பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை 5:30 மணிக்கு மூலவர் திரிவிக்கிரமன் விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு நித்திய பூஜைகள், 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் ஆசனத்தில் இருந்து புறப்பாடாகி, கண்ணாடி அறையில் எழுந்தருளி, விசேஷ திருமஞ்சனம் நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !