உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் பரவசம்

சூலூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் பரவசம்

சூலூர்: புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, சூலூர் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அப்பநாயக்கன் பட்டி, காங்கயம்பாளையம், கள்ளப் பாளையம் மற்றும் கருமத்தம்பட்டி கரிய மாணிக்கப்பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரவழி மாதப்பூர் ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில், அபிஷேக பூஜைக்குப்பின், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !