உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறவிக் கடலைத் தாண்டலாம்

பிறவிக் கடலைத் தாண்டலாம்

விளக்குகிறார் வியாசர்

* தர்மம் ஒன்றே பிறவிக்கடலை தாண்ட உதவும் தோணி.  
* வீண் பேசுவதோ கேட்பதோ கூடாது.
* கடவுளுக்கு நைவேத்யமாக படைத்த உணவை உண்ணுங்கள்.
* தர்மம் இருக்குமிடத்தில் கடவுள் குடிகொண்டிருக்கிறார்.
* கடவுளின் திருநாமத்தை எப்போதும் ஜபியுங்கள்.  
* தர்மவழியில் வாழ்வதே கல்வி கற்றதன் அடையாளம்
* நல்ல வழியில் பணம் சம்பாதித்து பிறருக்கு உதவுங்கள்.
* அலை பாயும் மனதை அடக்கியாளக் கற்றுக் கொள்ளுங்கள்.
* ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள்.
* கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறாதீர்கள்.
* உண்மையை உணர்ந்தவர்கள் அடக்கமுடன் நடப்பர்.  
* ஆசை எப்போதும் அறிவுக்கு எதிராகவே செயல்படுகிறது
* கோபத்தை கைவிட்டவரை துன்பம் நெருங்குவதில்லை.  
* கவர்ச்சியைக் கண்டு மயங்குவது கூடாது.  
* உயிர் உள்ள வரை பிறவிக்குணம் நீங்குவதில்லை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !