உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிழலில் இளைப்பாறலாம்

நிழலில் இளைப்பாறலாம்


வெயிலில் சாலையோர மரங்கள் நிழல் தருகின்றன. மரங்களைப் போல சில நண்பர், உறவினர்கள் நிழலாக உதவுகின்றனர். ஆனால்  கடைசி வரை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. இறைவனி்ன் நிழல் மட்டுமே மறுமை நாளிலும் நம்மைக் காப்பாற்றும்.
 ‘‘ மறுமைநாளில் இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலில் ஒதுங்க முடியாது. ஏழு வகையான மனிதர்களுக்கு மட்டும்  நிழல் கிடைக்கும்’’ என்கிறார் நாயகம்.
1 .நீதிநெறியை பின்பற்றும் தலைவர்
2. இறை வழிபாட்டில் ஈடுபடுபவர்.
3. பள்ளிவாசலுடன் தொடர்புள்ளவர்.
4. மார்க்க விஷயத்தில் ஒற்றுமை காப்பவர்.  
5. தனிமையில் இறைவனுக்காக கண்ணீர் வடிப்பவர்.
6. இறைவனுக்கு பயந்து அழகிய பெண்ணின் அழைப்பை விட்டு விலகுபவர்.
7. வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் தர்மம் கொடுப்பவர்.
இதில் ஒன்றை பின்பற்றினாலும், இறை நிழலில் இளைப்பாறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !