ஆயுள் அதிகரிக்க...
ADDED :1843 days ago
நீங்கள் உங்கள் உறவினர்களுடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவரா? ஆயுள் குறையும் வாய்ப்பு அதிகம்.
நபித்தோழரான அனஸ், “தம் உறவினர் வளர்ச்சியடைய வேண்டுமென விரும்புவோரும், தம் வாழ்நாளை நீடிக்கச் செய்ய வேண்டும் என ஆசைப்படுவோரும் உறவினர்களுக்கு உதவி செய்யட்டும்’’ என்கிறார்.
ஆனால் இன்றைய நிலையோ தலைகீழாக உள்ளது. உறவினர்களுக்குள் போட்டி, பொறாமை அதிகரிக்கிறது. அவனிடம் இருக்கும் பணத்தை விட எனக்கு அதிக பணம் வேண்டும், அவன் பிள்ளைகளை விட, என் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும். பெரும்பாலும் ஏழை உறவினர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். கேவலமாகப் பேசி அவர்களை வேதனைக்கு ஆளாக்குகிறார்கள். இப்படிப்பட்ட தீய எண்ணங்கள் ஒருவரின் ஆயுளைக் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதற்கு மாறாக ஏழை உறவினர்களுக்கு உதவுங்கள். அந்த நன்மையின் பயனாக ஆயுள் அதிகரிக்கும்.