வேண்டாமே ஆடம்பரம்
ADDED :1842 days ago
எளிமையான வாழ்க்கையை இயேசு ஆதரிக்கிறார். அவர் தன் வாழ்நாளில் உயர்ரக ஆடைகளை அணிந்ததில்லை. சாதாரண அங்கி அணிந்திருந்தார். மரணத்தின்போது அங்கியும் கழற்றப்பட்டு வெற்றுடம்புடன் சிலுவையில் அறையப்பட்டார்.
இன்று தங்களை உயர்ந்தவர்களாகக் காட்ட மக்கள் விரும்புகின்றனர். ஆடம்பர உடைகள் அணிந்து, சென்ட் தடவி, பவுடர் பூசி, உதட்டில் சாயம் தடவிக் கொள்கின்றனர். இதனால் நன்மை உண்டாகாது.
“மாபெரும் செல்வத்தை விட நற்பெயர் சிறந்தது,”
இதை உணர்ந்து ஆடம்பரத்தை துாக்கி எறியுங்கள். எளிமையை பின்பற்றி நற்பெயர் பெறுங்கள்.