உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் கொரோனா பரிசோதனை ஓட்டம் பிடிக்கும் பக்தர்கள்

கோவில்களில் கொரோனா பரிசோதனை ஓட்டம் பிடிக்கும் பக்தர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதால், செவிலியர்களை பார்த்து, பக்தர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்.

காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில், வைரஸ் தொற்று தடுப்பு பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்காக, அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார மையம் மற்றும் பொது இடங்களில், நகராட்சி சார்பில், சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், வழிபாட்டு தலங்களை திறக்க, கடந்த மாதம் அரசு உத்தரவிட்டதை அடுத்து, வீடுகளில் முடங்கி இருந்த மக்கள், கோவில்களுக்குச் செல்ல துவங்கினர். இதனால், காஞ்சிபுரத்தில் முக்கிய கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.கூட்டம் அதிகரிப்பதால், வைரஸ் தொற்று பாதிப்பு மேலும் கூடும் என்பதால், கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, சுகாதாரப்பணியாளர்கள், வாசலிலே நின்று, வைரஸ் பரிசோதனை செய்கின்றனர். இவர்களை பார்த்ததும்,சில பக்தர்கள், பரிசோதனையில் தொற்று இருந்தால் என்ன செய்வது என பயந்து, கோவிலுக்கு வராமல் திரும்பிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !