உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜை

உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜை

 உடுமலை: உடுமலை, கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகை நாளையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. உடுமலையில், கொரோனா பாதிப்புகள் குறைவதற்கு கோவில்களில் சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது. சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகையையொட்டி, விநாயகர் மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடந்தது. குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில், விநாயகருக்கு தங்ககாப்பு, சுப்ரமணிய சுவாமிகளுக்கு வெள்ளி காப்பு அலங்காரத்திலும் சிறப்பு பூஜை நடந்தது. போடிபட்டி, காரிய சித்தி விநாயகர் கோவிலிலும், சூர்யா கார்டன், தில்லை நகர் ரத்னலிங்கேஸ்வரர் கோவிலிலும், சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. பக்தர்கள், பாதுகாப்பு வழிமுறைகளுடன், கோவில்களில் வழிபட்டுச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !