பெருந்துறை கோவிலில் 25ல் கும்பாபிஷேக விழா
ஈரோடு: பெருந்துறை, வெள்ளமுத்துக் கவுண்டன்வலசு விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, மே, 25ல் நடக்கிறது. பெருந்துறை, தென்முகம் வெள்ளோடு கிராமம், வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு பகுதியில் உள்ள விநாயகர், மாரியம்மன் கோவில் திருப்பணி நடந்தது. தற்போது, மஹா கும்பாபிஷேக விழா வரும், 25ம் தேதி நடக்கிறது. இதற்காக, 23ம் தேதி இரவு 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகம், பஞ்சகவ்யம் மற்றும் கிராமசாந்தி பூஜை நடக்கிறது. 24ம் தேதி காலை 8 மணிக்கு மஹாகணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் பிரதிஷ்டை, சிலைகளுக்குக் கண் திறப்பு பூஜைகள் மற்றும் தீர்த்தம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைத்து கோவிலுக்கு வருதல், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. 25ம் தேதி அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, 6 முதல் 7 மணி வரை விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. 7 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.