உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன், பட்டாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா

மாரியம்மன், பட்டாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா

துறையூர்: துறையூர் அருகே சிறுநாவலூர் மற்றும் டி.புதுப்பட்டி வெங்கடாஜலபுரத்திலும் உள்ள மாரியம்மன், பட்டாயி அம்மன் கோவில்களில் நாளை 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. துறையூர் அருகே சிறுநாவலூரில் பட்டாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இன்று 22ம் தேதி மாலை கணபதி ஹோமம் செய்து, கும்பாபிஷேகம் யாக பூஜைகள் தொடங்குகிறது. நாளை 23ம் தேதி காலை 7.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை ஒக்கரை ஸ்தபதி குமாரசாமி நடத்துகிறார். துறையூர் அருகே டி.புதுப்பட்டி வெங்கடாஜலபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட மகாதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 21ம் தேதி (நேற்று) காலை கணபதி ஹோமம் நடந்தது. காலை 9 மணிக்கு காவிரியிருந்து திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டது. மாலையில் மங்கள இசை, முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று 22ம் தேதி யாகபூஜைகள் நடக்கிறது. நாளை 23ம் தேதி காலை 6 மணிக்கு மகாகும்பாபிஷேகம், அபிஷேக, தீபாராதனைகள் நடக்கிறது. இரவு அமமன் திருவீதி உலா நடக்கிறது. கும்பாபிஷேகத்தை ஸ்ரீரங்கம் வரதராஜ குருக்கள் நடத்தி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !