காசியாத்திரை செல்வது ஏன்?
ADDED :1855 days ago
கல்யாணச் சடங்கில் காசியாத்திரை என்ற சடங்கு உண்டு. கல்யாணத்திற்கும், காசி யாத்திரைக்கும் தொடர்பு இருப்பதால் தான் இந்த சடங்கை நடத்துகின்றனர். கையில் மூங்கில் குச்சியும், குடையுமாக மாப்பிள்ளை காசியாத்திரைக்குப் புறப்படுவார். பெண்ணின் தந்தை அவரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார். ‘என் மகளைக் கல்யாணம் செய்து நிம்மதியாக வாழுங்கள்” என்று சொல்லி மாப்பிள்ளையை அழைத்து வருவார். ‘வாழ்க்கை என்பது பொறுப்பை தட்டிக்கழிப்பதற்கானது அல்ல. மனைவி, குடும்பம் என்ற கடமையை விருப்பத்துடன் ஏற்று, குடும்ப வாழ்வில் வெற்றி பெறுபவனே சிறந்த ஆண்மகன்’ என்பதை இந்த யாத்திரை உணர்த்துகிறது. இதை வெறும் உபதேசமாக மட்டுமில்லாமல், சடங்காக திருமணத்தில் சேர்த்தனர். காசியாத்திரை உணர்த்தும் உண்மை ‘இல்லறம் அல்லது நல்லறம் அன்று’என்பது தான்.