உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவில் அமாவாசை இரவு அடைப்பு

மாசாணியம்மன் கோவில் அமாவாசை இரவு அடைப்பு

 ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை அன்று இரவு கோவில் நடை திறக்கப்படாது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதனால், அமாவாசை அன்று இரவு கோவில் நடை திறந்திருப்பது வழக்கம். இந்த மாதத்துக்கான அமாவாசை வரும், 16ம் தேதி வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, அமாவாசை அன்று இரவு கோவில் நடை திறக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !