சலேத்மாதா ஆலயத்தில் முழங்காலிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ADDED :4897 days ago
தாடிக்கொம்பு: திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே மறவபட்டிபுதூர் சலேத் மாதா ஆலயத்தில், முழங்காலிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலய விழா, மே 15 ல், கொடிபவனியுடன் துவங்கியது. தினமும் நவநாள் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் சப்பரம் பவனி வந்தது. நேற்று மாலை 3 மணிக்கு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்பவனி நடந்தது. சப்பரம் நிலையை அடைந்ததும், பக்தர்கள் முழங்காலிட்டு, மெழுகுவர்த்தி ஏந்தி வலம் வந்தனர். நிறைவாக நன்றித் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பாதிரியார் எர்னெஸ்ட் அந்தோணிசாமி, அருட்சகோதிரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.