மகாபாரதம் வரலாற்று சான்றுகள் பற்றி சி.டி., வெளியீடு!
சென்னை: கலை, கலாசாரம், மருத்துவம், கல்வி, அறிவியல் என, அனைத்து துறைகளிலும் மற்ற நாடுகளுக்கு நாம் தான் வழிகாட்டியாக இருந்துள்ளோம். இதை, இளைய சமுதாயத்தினர் புரிந்து கொள்ள வேண்டும், என, உயர்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் பேசினார். இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் நிறுவனர் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளருமான, டி.கே.வி.ராஜன், மகாபாரத போர் நிகழ்ந்த குரு÷க்ஷத்ரா மற்றும் கிருஷ்ணர், ராதை வாழ்ந்ததாகக் கூறப்படும் பிருந்தாவன் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, அதை, "பிருந்தாவன் மற்றும் குரு÷க்ஷத்ரா- நினைவலைகள் என்ற தலைப்பில், குறுந்தகடாக தயாரித்துள்ளார். அதன் வெளியீட்டு விழாவில், டி.கே.வி.ராஜன் பேசியதாவது: மகாபாரதம் என்பது, உண்மையாக நடந்த ஒரு நிகழ்வு என்பதை உறுதிப்படுத்த, பல ஆதாரங்கள் உள்ளன. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர், பகவத் கீதையை உபதேசித்த இடமான ஜோதிசர், போரில் வெற்றி கிடைக்க அர்ஜுனன் வழிபட்ட குரு÷க்ஷத்திரத்தில் அமைந்துள்ள துர்க்கை கோவில், பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருந்த பான்கங்கா மற்றும் கண்ணன், ராதை சந்தித்த இடமான இம்விதலா உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் நடத்தி, அதில் கிடைத்த உண்மைகளை இந்த குறுந்தகட்டில் பதித்துள்ளேன், என்றார்.