வசிஷ்டபுரம் கோவில் பிரம்மோற்சவம்: 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!
ADDED :4898 days ago
திட்டக்குடி:திட்டக்குடி வசிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திட்டக்குடி அடுத்த வசிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ஜூன் மாதம் 2ம் தேதி காலை பெருமாளை தேரில் ஏற்றி, திருத் தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. பின், 3ம் தேதி மதியம் 3 மணிக்கு துவாதச ஆராதனம், புஷ்பயாகம், பெரிய சாற்றுமுறை ஆழ்வார்கள் மரியாதை நடக்க உள்ளது. பகவத் சாஸ்திர வித்தகர் வரதசிங்காச்சாரியார் சுவாமிகள் நடத்தி வைக்கிறார். முத்து கோவிந்தாச்சாரியார், ராகவன் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.