உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேரோடு அகற்றுங்கள்

வேரோடு அகற்றுங்கள்


தொழுநோயில் இருந்து குணம் பெற்ற சிமியோன், “ஆண்டவரே! உமக்கு காணிக்கையாக திராட்சை தோட்டத்தைத் தருகிறேன்’’ . என அவரிடம் ஒப்படைத்தான். அந்த தோட்டத்தில் ஒரு முள்செடி ஒன்று இருந்தது. அதை அகற்றிவிடும்படி சீயோனிடம் தெரிவித்தார். அவனும் வேலைக்காரர்களை அனுப்பி வைக்க, அவர்கள் வேரோடு அகற்றாமல் மேல் பகுதியை மட்டும் வெட்டி சென்றனர். எனவே அது மீண்டும் முளைத்தது.
பிற்காலத்தில் இயேசுவின் மீது புகார் கூறிய தலைமை குரு, அவரது தலையில் முள் கிரீடம் வைக்க ஆணையிட்டார். ஒரு போர்வீரன் திராட்சை தோட்டத்திற்குச் சென்று, அந்த முள்செடியை வெட்டி அதைக் கொண்டே கிரீடம் செய்து அவரது தலையில் ரத்தம் வழிய அழுத்தினான்.
சிமியோன் அழுது புலம்பினான்.
“ஆண்டவர் சொன்னபடி முள் செடியை முழுமையாக அகற்றாமல் போனேனே’’  என புலம்பினான். பாவங்களை வேரோடு அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை திருப்பித் தாக்கும்.
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வு பெற மாட்டான். அவற்றை அறிக்கையிட்டு விட்டு விடுபவனோ இரக்கம் பெறுவான்’’


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !