தவறுக்காக அழுதவர்
ADDED :1846 days ago
அறிஞர் சார்லஸ் டார்வின் எழுதிய ‘ஆராய்ச்சியின் காலம்’ என்ற நுாலில், ‘மனிதர்கள் ஆண்டவரால் படைக்கப்படவில்லை. இயற்கையால் படைக்கப்பட்டனர்’ என எழுதியிருந்தார். ஏராளமான இளைஞர்கள் இதை உண்மை என நம்பினர். பிற்காலத்தில் மரணப்படுக்கையில் கிடந்த நேரத்தில், “இளைஞர்கள் பலரும் என் கருத்தை உண்மை என நம்பியதால் ஆண்டவருக்கு பயப்படாமல் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வு பாழாக காரணமாகி விட்டேன். அதற்கான பாவம் என்னையே சாரும்” என அழுதார் டார்வின். ஆண்டவருக்கு விரோதமாக செயல்பட்டால் நிச்சயம் மனிதன் வருந்த நேரிடும்.