விபீஷண கீதை
ADDED :1839 days ago
தம்பி கும்பகர்ணன், மகன் மேகநாதன் உள்ளிட்ட அனைவரையும் போரில் இழந்தான் ராவணன். இந்நிலையில் தனியாளாக ராமனோடு போர் புரியத் தயாரானான். யுத்த ரதம் என்னும் பலம் மிக்க தேரில் ஏறி போர்க்களத்திற்கு புறப்பட்டான். இதை அறிந்த விபீஷணன், ‘‘அனைத்து ஆயுதங்களையும் தாங்கிக் கொண்டு கோபமுடன் செல்லும் ராவணன் முன், ஒரே ஒரு வில்லை மட்டும் ஏந்திய படி நிற்கும் ராமர் வெற்றி பெறுவாரா?” என சந்தேகம் எழுந்தது.
தன் மீதுள்ள அன்பால் விபீஷணன் பயப்படுவதை உணர்ந்த ராமர், ‘தர்மமே வெல்லும்’ என்னும் உண்மையை உபதேசித்தார். இதுவே ‘விபீஷண கீதை’ எனப்படுகிறது.