உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை தரிசனம்: கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம்

சபரிமலை தரிசனம்: கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், கோவிலில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று வெளியிட்டார்.

இது தொடர்பாக பினராயி கூறியதாவது:நாளை (அக்.16)திறக்கப்பட உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வேண்டும். ஒரு நாளைக்கு 250 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல்நிலை மலையேற தகுதியுடன் தான் உள்ளது என உடல் நல தகுதிச்சான்றிதழும் கட்டாயம் வேண்டும். என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !