உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வநாத சுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்!

விஸ்வநாத சுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்!

சிவகாசி: சிவகாசி விஸ்வநாத சுவாமி, விசாலாட்சி அம்மன் கோயிலுக்கு, ரூ.30 லட்சத்தில் செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம் நடந்தது.சிவகாசி சிவன்கோயிலில் விஸ்நதாதசாமி, விசலாட்சி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு நடக்கும் விழாக்களில் சுவாமி தேரில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம். ஆனால் 50 ஆண்டுகளுக்கு மேலாக தேர் பழுதடைந்ததால், தேரோட்டம் நடைபெறவில்லை. விழா நாட்களில் சிறிய அளவிலான சட்டதேரில் சுவாமியை வைத்து வீதி உலா நடத்தினர். சிவன் கோயிலுக்கு தேர் இல்லை என்ற குறையும் பக்தர்களிடம் இருந்தது. இக் குறையை போக்கும் வகையில், சிவகாசி தெய்வீக பேரவை சார்பில் , பக்தர்களிடம் நன்கொடை பெற்று ,தேர் செய்யும் பணி நடைபெற்றது. ரூ.30லட்சம் செலவில் தேர் முழுமை பெற்றது. கோயில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அதன்படி நேற்று வெள்ளோட்டம் நடந்தது. சிறப்பு பூஜைகள் நடந்தன. தெய்வீக பேரவை தலைவர் ராஜப்பன் தேரை இழுந்து துவக்கி வைத்தார். அதன்பின் பக்தர்கள் "ஹர ஹர சங்கரா என்ற கோஷசத்துடன் ரத வீதிகளில் இழுத்து சென்றனர். இந்து அறநிலையதுறை உதவி ஆணையர் மாரிமுத்து, ஆய்வாளர் முத்துராமலிங்கம், கோயில் நிர்வாக அதிகாரி பூவலிங்கம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !