அரங்கநாத பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :1811 days ago
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி நான்காம் நாளையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள், ரங்கவள்ளி தாயாருடன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி தரிசனம் செய்தனர்.