அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா
ADDED :1911 days ago
புதுச்சேரி: புதுச்சேரி அங்காளம்மன் கோவில் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
புதுச்சேரி, சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா, கடந்த 17ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் அம்மன் மங்கள தூர்க்கை அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று சந்தான லட்சுமி அலங்காரமும், நாளை தனலட்சுமி அலங்காரமும் செய்யப்படுகிறது. 26 நாள்கள் நடக்கும் நவராத்திரி விழாவில் அடுத்த மாதம் 10ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 11ம் தேதி பாவாடை ராயர் சுவாமி உற்சத்துடன் விழா நிறைவடைகிறது.