அந்தக்கால நுழைவுத்தேர்வு
ADDED :1819 days ago
சிலர் நுழைவுத் தேர்வுகளுக்கு இப்போது எதிர்ப்பு காட்டுகின்றனர். நுழைவுத்தேர்வு இன்று நேற்றல்ல. பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஜெருசலேமில் நடந்த நுழைவுத்தேர்வு பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
இங்கு பவுல் கமாலியேல் என்ற பரிசேயர் ஒருவர் இருந்தார். சிறந்த ஆசிரியரான இவரிடம் படிக்க மாணவர்களிடம் போட்டி நிலவியது. அதற்காக நுழைவுத்தேர்வு வைத்து சிறந்தவர்களை தேர்வு செய்வார். தேர்வில் கேள்விகள் கடுமையாக இருக்கும்.
இவரது வகுப்பறையும் வித்தியாசமானது. உயரமான நாற்காலியில் காலைத் தொங்கவிட்டு கமாலியேல் அமர்ந்திருப்பார். அவரது காலடியில் விரிக்கப்பட்டிருக்கும் பாயில் மாணவர்கள் உட்கார வேண்டும். பணிவும், அறிவும் மிக்கவர்கள் மட்டுமே இவரது வகுப்பில் பாடம் கற்றனர்.