சமத்துவ சமுதாயம்
ADDED :2167 days ago
இயேசு பிறந்த இஸ்ரேல் நாட்டில் மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருந்தது. நாட்டு மக்களை 290 பிரிவுகளாகப் பிரித்தனர். இந்த பிரிவுக்கு ‘கிட்பூட்ஸ்’ என்று பெயர். ஒவ்வொரு பிரிவுக்கும் விவசாய நிலம் தரப்பட்டு வேலை பகிர்ந்தளிக்கப்பட்டது. எல்லா பிரிவினருக்கும் வருமானத்தில் சமபங்கு தரப்பட்டது. சம அளவுள்ள வீடு, சமையல் பாத்திரங்கள். துணிமணிகள் முதலானவை அரசால் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அனைத்து குழந்தைகளும் சமமாகப் பேணப்பட்டனர். இதற்கான பொறுப்பை கண்காணிப்பு குழுவினர்கள் நிர்வகித்தனர். ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயம் அங்கிருந்தது.