சித்தானந்தா சுவாமி கோவிலில் குருபூஜை விழா
புதுச்சேரி : சித்தானந்தா சுவாமி கோவில் குருபூஜை விழாவினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் 175ம் ஆண்டு குரு பூஜை விழா வரும் 27மற்றும் 28ம் தேதிகளில் நடக்கிறது. இதனையொட்டி வரும் 27ம் தேதி சித்தானந்தா சுவாமியின் வாழ்க்கை வரலாற்றில் அற்புத நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்று நாடகம் நடக்கிறது.மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த நாடகத்தை ஓம் கலைக்குழுவினர் செய்ய உள்ளனர். இரவு 8 மணிக்கு முருகைய ராஜேந்திரனின் வாக்கும் மனமும் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதனையடுத்து வரும் 28ம் தேதி மாலை 5 மணியளவில், கிங்பைசல் குழுவினரால் சிவன் - சக்தி நடனம், 8 மணிக்கு சூசைராஜ் வழங்கும் பக்தி இசை, 9 மணிக்கு குறிஞ்சிப்பாடி வைத்தியநாதனின் நாமாற்கும் குடியெல்லாம் என்னும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.