மகா மாரியம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
ADDED :4898 days ago
திட்டக்குடி : திட்டக்குடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.திட்டக்குடி மேலவீதியில் உள்ள மகா மாரியம்மன் திருக்கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 10.30 மணிக்கு மேல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. வரும் 30ம் தேதி ஊரணி பொங்கலும், 31ம் தேதி காலை 10 மணிக்கு தேர் திருவிழா, வரும் 1ம் தேதி மாலை 5 மணிக்கு தீமிதி திரு விழா நடக்கிறது.