உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழைகுளக்கரை சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வாழைகுளக்கரை சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே வாழைகுளக்கரை சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த பூவாலை மேற்கு கிராமத்தில் வாழை குளக்கரை சக்திவிநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கலாரஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜை மற்றும் லட்சுமி பூஜையை நடந்தது. காலை 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தில் பூவாலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சவாமி தரிசனம்  செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !