உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேப்பர்மலை எஸ்.புதூர் கோவில்சாகை வாத்தல் திருவிழா துவக்கம்

கேப்பர்மலை எஸ்.புதூர் கோவில்சாகை வாத்தல் திருவிழா துவக்கம்

கடலூர் : கடலூர் அடுத்த எஸ்.புதூர் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா துவங்கியது.கடலூர் கேப்பர்மலை அடுத்த எஸ். புதூர் கிராமத்தில் உள்ள  முத்தாளம்மன் கோவிலில் சாகைவார்த்தல் திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வேண்டுதல் நிறைவேற்றி கூழ் ஊற்றுதல் முடித்து மாலை கிராம மக்கள் ஊரணி பொங்கல் வைத்தனர். தினமும் சுவாமி வீதியுலாவும்,  இரவில் நாடகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை எஸ்.புதூர் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !