திருமலை பிரம்மோற்சவத்தில் சர்வபூபாள வாகனம்
ADDED :1854 days ago
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ நவராத்திரி எட்டாம் நாளான இன்று இரவு குதிரை வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். திருமலையில் நடைபெறும் விழாக்களிலேயே மிகவும் பிரசித்தமான பிரம்மோற்சவ விழா தற்போது நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவும் அபாயம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவிலுக்குள் உள்ளே உள்ள கல்யாணமண்டபத்தில் வைத்து விழா நடக்கிறது. காலையில் சர்வபூபாள வாகனத்தில் தேவியருடன் சுவாமி உலா வந்தார்.நாளை ஒன்பதாவது நாள் சக்ரஸ்நானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.