உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடத்தில் 85வது ஆண்டு நவராத்திரி கொலு வழிபாடு

பல்லடத்தில் 85வது ஆண்டு நவராத்திரி கொலு வழிபாடு

பல்லடம்: பல்லடத்தில், 85வது ஆண்டாக நவராத்திரி கொலு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அக்., 17 முதல் நவராத்திரி வழிபாடு துவங்கி, நாளையுடன் நிறைவடைய உள்ளது. பல்லடத்தில், 85வது ஆண்டாக நவராத்திரி வழிபாடு கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லடம் - மங்கலம் ரோட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம், 70. இவரது வீட்டில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு வைக்கப்படுவது வழக்கம். அதுபோல், தற்போது, 85வது ஆண்டாக கொலு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சோமசுந்தரம் கூறுகையில், எனது தந்தை, மற்றும் தாத்தா காலத்தில் இருந்து தொடர்ந்து கொலு வைக்கும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டது வருகிறது. அவ்வாறு, 85வது ஆண்டாக கொலு வைத்துள்ளோம்‌. கொலுவில், விநாயகர், முருகன், கிருஷ்ணர், சிவன்- பார்வதி, துர்கை, நவகிரகம், அஷ்ட லட்சுமி, துளசி மாடம், உள்ளிட்ட பல்வேறு சிலைகள், பொம்மைகள் வைத்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சிலைகள் வாங்கி வைப்பது வழக்கம். ஒன்பது நாட்களும் தினசரி மாலை வழிபாடு நடக்கும் வீட்டில் கொலு வைப்பது மன நிம்மதி தருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !