செம்மறியாடு வாகனம்
ADDED :1911 days ago
புதுடில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பத்தாம் நுாற்றாண்டை சேர்ந்த சரஸ்வதி சிலை உள்ளது. மலர்ந்த தாமரையில் அமர்ந்துள்ள இவளின் கைகளில் அட்ச மாலை, சுவடிகள் உள்ளன. முத்துமாலை மேனியை அலங்கரிக்கிறது. கிரீடம் போன்ற அமைப்புடன் தலைமுடி உள்ளது. வடமாநிலங்களில் சரஸ்வதிக்கு அன்னப்பறவை வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு மட்டும் செம்மறி ஆடு முன்கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் கம்பீரமாக உள்ளது. சரஸ்வதியின் திருவடியை வணங்கியபடி பக்தர் ஒருவரும் உடனிருக்கிறார்.