பத்து இரவுகள் திருவிழா
ADDED :1864 days ago
கர்நாடகாவை ஆட்சி செய்த மன்னர்கள் நவராத்திரியின் போது மைசூரு சாமுண்டீஸ்வரியை வழிபடுவர். பத்தாம் நாளான விஜயதசமியன்று போருக்குச் சென்று அம்மன் அருளால் வெற்றி வாகை சூடுவர். இதனடிப்படையில் தற்போது மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. ‘தஸ் ராத்’ எனப்படும் இந்த விழா தற்போது ‘தசரா’ எனப்படுகிறது. ‘பத்து இரவுகள்’ என்பது இதன் பொருள்.