உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி பௌர்ணமி: சோளீஸ்வரர்க்கு அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமி: சோளீஸ்வரர்க்கு அன்னாபிஷேகம்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோளீஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னாபிஷேகம் நடந்தது. சோளீஸ்வர சுவாமிக்கு 16 திரவியங்கள் அடங்கிய அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அன்னம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !