பழநி சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
ADDED :1805 days ago
பழநி : ஜப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிவன் கோயில்களிலும் அன்னாபிேஷகம் நடந்தது. பழநி பெரியாவுடையார் கோயில், மதனபுரம் அண்ணாமலையார் உண்ணாமுலை நாயகி கோயிலில் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகமும், சிறப்பு பூஜைகள் நடந்தது. வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பால், பன்னீர், இளநீர் அபிஷேகங்களும், அன்னாபிஷேகமும் நடந்தது. திருவடியார் கூட்டம் சார்பில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயில், குட்டத்துப்பட்டி ஆதிதிருமூலநாதர் கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலிலும் அன்னாபிேஷக சிறப்பு ஆராதனைகள் நடந்தது.