உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நுாக்கலம்மன் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி பூஜை

நுாக்கலம்மன் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி பூஜை

 உத்திரமேரூர் : உத்திரமேரூர் நுாக்கலம்மன் கோவிலில், 103வது பவுர்ணமி பூஜை, நேற்று நடந்தது. உத்திரமேரூர் - எல்.எண்டத்துார் சாலையில், பழமையான நுாக்கலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று, 103வது பவுர்ணமி பூஜை நடந்தது. இதில், அரச மரத்தடி விநாயகர், துவார பால முருகர், நுாக்கலம்மனுக்கு காலையில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.பகல், 12:00 மணிக்கு, அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நுாக்கலம்மன், ஊஞ்சல் சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !