ஊத்துக்கோட்டை கோவில்களில், 4ம் தேதி சங்கடஹர சதுர்த்தி
ADDED :1856 days ago
ஊத்துக்கோட்டை : வினாயகர் கோவில்களில், ஒவ்வொரு மாதமும், சதுர்த்தி தினத்தன்று, சங்கடஹர விழா நடைபெறுவது வழக்கம் .வரும், 4ம் தேதி, இந்த மாதத்திற்கான, சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை, செல்வ வினாயகர் கோவில், திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வினாயகர் சன்னதி, புற்றுக்கோவில் வினாயகர் சன்னதி, தாராட்சி பரதீஸ்வரர் கோவிலில் உள்ள வினாயகர் சன்னதி.சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வரசித்தி வினாயகர் சன்னதி ஆகியற்றில் சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.இதையொட்டி, வினாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்படும். பக்தர்கள் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர்.