உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சிவபெருமானுக்கு அன்னாபிேஷகம்

உடுமலை சிவபெருமானுக்கு அன்னாபிேஷகம்

உடுமலை, குறிஞ்சேரி ரிண விமோசன லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷக சிறப்பு பூஜை நடந்தது.ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், பவுர்ணமியன்று சிவன் கோவில்களில், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.குறிஞ்சேரி ஊராட்சியில் ரிண விமோசன லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஐப்பசி மாத பவுர்ணமி நாளையொட்டி, இக்கோவிலில், லிங்கேஸ்வரருக்கு, பால், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களில் சிறப்பு பூஜை நடந்தது. அன்னத்தால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழிபட்டு சென்றனர்.பொள்ளாச்சிபொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் அன்னம், காய்கறி, பழங்கள் கொண்டு, ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. மாகாளியம்மன் கோவிலில் ருத்ரலிங்கேஸ்வரருக்கு அன்னாபிேஷக செய்யப்பட்டது. திப்பம்பட்டியில், 500 ஆண்டுகள் பழமையான மலையாண்டி ஈஸ்வரர் கோவிலில், அன்னாபிேஷக வழிபாடு நடந்தது.ஆனைமலை ரமணமுதலிபுதுார், மகுடீஸ்வரி உடனமர் மண்கண்டேஸ்வரர் ஆலயத்தில், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஆனைமலை சோமேஸ்வரர், கோட்டூர் மலையாண்டிபட்டணம், உச்சி மாகாளியம்மன் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. கிணத்துக்கடவுகிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், சிவலோகநாதருக்கு அன்னம் சாத்தப்பட்டு, அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அன்னாபிேஷகம் கலைக்கப்பட்டு, சிவலோகநாதருக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், எலும்பிச்சை, சந்தனம், குங்குமம் அபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது.கிணத்துக்கடவு எஸ்.என்.பி., நகர் சோற்றுத்துறை நாதர், கொண்டம்பட்டி மல்லேஸ்வரர் கோவில்களில் அன்னாபிேஷ பூஜை சிறப்பாக நடந்தது -- நிருபர் குழு -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !