உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்ற கிரிவல ரோடு சீரமைப்பு; தினமலர் செய்தி எதிரொலி

திருப்பரங்குன்ற கிரிவல ரோடு சீரமைப்பு; தினமலர் செய்தி எதிரொலி

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் தினமலர் செய்தி எதிரொலியாக கிரிவல ரோடு 15 ஆண்டுகளுக்குப்பின் முழுமையாக தார் ரோடாக அமைக்கப்படுகிறது.

பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். தினமும் காலை, மாலையில் ஏராளமானோர் நடைபயிற்சியும் மேற்கொள்கின்றனர். மலையை சுற்றி மூனேகால் கி.மீ., துாரம் கிரிவல ரோட்டில் 15 ஆண்டுகளுக்குமுன் தார் ரோடும், ஒரு பகுதியில் சிமென்ட் ரோடும் அமைக்கப்பட்டது. அதன்பின்பு சேதமடைந்த பகுதிகளில் மட்டுமே பேட்ஜ் ஒர்க் நடந்தது. சமீபகாலமாக ரோடு மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்திருந்தன. பக்தர்கள் நடக்கவே அவதியுற்றனர்.ரோட்டை சீரமைக்க தினமலர் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக மாநகராட்சி கமிஷனர் விசாகன் கிரிவல ரோட்டை பார்வையிட்டு தார் ரோடு அமைக்க உத்தரவிட்டார். ரூ.ஒன்றரை கோடி ஒதுக்கீடு செய்தார். அதன்படி தார் ரோடு அமைக்கப்படுகிறது. இப்பணியை மாநகராட்சி நகர் பொறியாளர் அரசு, செயற் பொறியாளர் முருகேச பாண்டியன், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவி பொறியாளர் முருகன் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !