பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2131 days ago
புதுச்சத்திரம் : பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.இரவு 9.30 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் கோவில் உலா வந்தார். இரவு 11.00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.