எந்த யுகத்தில் எந்த அவதாரம்?
ADDED :1827 days ago
மகாவிஷ்ணு பூமியில் தர்மத்தை நிலைநாட்ட மச்சம்,கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், பலராமர், கல்கி அவதாரங்களை எடுத்தார். முதல் ஐந்து அவதாரங்களை கிருதயுகத்திலும், ராம, பரசுராம அவதாரங்களை திரேதா யுகத்திலும் எடுத்தருளினார். துவாபரயுகத்தில் கிருஷ்ணர், பலராமராக வந்தருளினார். கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் எடுக்க இருக்கிறார். நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் ஆகிய மூன்று மட்டுமே மகாவிஷ்ணுவின் முழுமையான அவதாரங்களாகப் போற்றப்படுகின்றன. இவற்றை பூர்ணாவதாரங்கள் என்று குறிப்பிடுவர்.